திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களை இழந்தவருக்கு லோக் அதாலத் மூலம் 1 கோடி இழப்பீடு

திருப்பூர் : திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களையும் இழந்தவருக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களையும் இழந்தவருக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டது. 

திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டனில் வசித்து ஜெயப்பிரகாஷ் பூபதி தனியார் டையிங்க் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது பெருமாநல்லூர் சாலையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பூபதி பலத்த காயமடைந்தார். 



இந்த விபத்தில் அவரது இருகண்களும் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயபிரகாஷ் பூபதியின் மனைவி சுமதி விபத்திற்கு காரணமான வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த நிலையில், இன்று திருப்பூரில் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் பூபதிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...