தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ பணியிடங்கள் ஒருமாதத்தில் நிரப்பப்படும் : அமைச்சா் உடுமலை இராதாகிருஷ்ணன்

திருப்பூர் : தமிழகத்தில் காலியாக உள்ள 854 கால்நடை மருத்துவ பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.


திருப்பூர் : தமிழகத்தில் காலியாக உள்ள 854 கால்நடை மருத்துவ பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

உடுமலை அருகே உள்ள குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது நிதியிலிருந்து 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, புதிய குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இதில், அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து, அரசு பள்ளிக்குள் சென்ற அமைச்சா் ராதாகிருஷ்ணன் பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார். அவா்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், ழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய அவர், கட்டிட வசதி இல்லாமல் இருப்பதை அறிந்து, புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்யும்படி உத்தரவிட்டார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தமிழகத்தில் காலியாக உள்ள 854 கால்நடை மருத்துவப் பணியிடங்களுக்கு, கால்நடை துறையில் பயின்றவர்கள் தேர்வு மூலமாக ஒரு மாதத்தில் பணி அமர்த்தப்பட இருக்கின்றனர். தகுதியானவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்," என்றார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...