தலைமை ஆசிரியர் திட்டியதால் கோவை அரசுப் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

கோவை : சாய்பாபாகாலனி அருகே குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சாய்பாபாகாலனி அருகே குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய்பாபாகாலனி குப்பகோணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஷான் பாஷா (45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் சப்ரின் பேகம் (15) குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி மாணவி அவருடைய சக மாணவிகளுடன் சிரித்துப் பேசி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த தலைமையாசிரியை சகுந்தலா மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்குச் சென்று விட்டனர். 

இருப்பினும், மாணவி சப்ரின் பேகம் ஆசிரியர் திட்டியதால் மிகுந்த மனவருத்தத்துடன் நேற்று வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு செல்லும் போது வீட்டில் இருந்த மூட்டைப்பூச்சி மருந்தையும் உடன் எடுத்துச் சென்றுள்ளார். வழக்கம் போல பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி வளாகத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். பின்னர், விசாரித்த போது மாணவி மூட்டைப்பூச்சி மருந்தை குடித்திருந்தது தெரியவந்தது. இதனால், அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து சப்ரின் பேகத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

தற்போது, அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...