முறையற்ற பணியிட மாறுதல்கள் கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

கோவை: முறையற்ற பணியிட மாறுதல்கள் கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: முறையற்ற பணியிட மாறுதல்கள் கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 26-ம் தேதி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் நடப்பு கல்வியாண்டில் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பணியிட மாறுதல்களைக் கைவிட வேண்டும், கழக பொறுப்பாளர்கள் மீது விசாரணையின்றி பணியிட மாறுதலைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை கல்லூரி வாயில் முன்பும் வாயில் முழக்கப் போராட்டம் நடத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலை கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி அரசு இந்த போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்றும், இணை இயக்குநர்கள் நியமனத்தில் பணிமூப்பு பின்பற்றப் படவேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...