அதிகாரிகளின் தொடர் ஆய்வுகளால் வர்த்தகம் பாதிப்பு : கூடலூரில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

நீலகிரி : கடைகளில் அதிகாரிகள் நடத்தும் தொடர் சோதனைகளைக் கண்டித்து கூடலூரில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

நீலகிரி : கடைகளில் அதிகாரிகள் நடத்தும் தொடர் சோதனைகளைக் கண்டித்து கூடலூரில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். 

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகர்புறங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் உள்ள கடைகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளால், வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். 



இந்த நிலையில், கூடலூரில் பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் தேவையில்லாத கெடுபிடிகளை விதிப்பதாகவும், தங்களால் வியாபாரம் செய்ய முடியாத அளவிற்கு தொடர்ந்து கெடுபிடி செய்வதாக குற்றம்சாட்டி அனைத்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊர்வலமாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...