கோவைக்கு வந்தது பழங்கால பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து

கோவை: சிற்பக் கலைகள், அமராவதி சிலை உள்ளிட்ட பழங்கால சின்னங்களை விளக்கும் நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து கோவைக்கு வந்துள்ளது.

கோவை: சிற்பக் கலைகள், அமராவதி சிலை உள்ளிட்ட பழங்கால சின்னங்களை விளக்கும் நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து கோவைக்கு வந்துள்ளது. 



சென்னையை மையமாகக் கொண்ட மிகவும் பழமையான அருங்காட்சியகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து 3 நாள் பயணமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. 



2-வது நாள் நிகழ்ச்சியில் குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், நிர்மல் மாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளிக்கும் இந்தப் பேருந்து செல்கிறது. 



சென்னை அருங்காட்சியகத்தைப் போலவே, இந்தப் பேருந்தில் தென்னிந்திய சிற்பக் கலைகள், அமரவாதி சிலைகள், குப்தா, சோழர் காலத்து நாணயங்கள் மற்றும் குகை ஓவியங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 



"1851 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை அருங்காட்சியகம் நாட்டின் 2-வது மிகவும் பழமையான அருங்காட்சியகம் ஆகும். இதன் சிறப்புகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகப் பேருந்து மிகவும் உதவிகரமாக இருக்கிறது," என இதன் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறினார்.



Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...