பணியிட மாற்றம் செய்ததால் மனவிரக்தி: கோவை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

கோவை: வால்பாறையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விரக்தியடைந்த அரசுப் போக்குவரத்து ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: வால்பாறையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விரக்தியடைந்த அரசுப் போக்குவரத்து ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த வேல்முருகன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வால்பாறை கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். தி.மு.க., தொழிற்சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ள இவர் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார். 

இதற்காக அவர் கோவை மேட்டுப்பாளையம் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து, தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து மீண்டும் வால்பாறையிலேயே பணியாற்ற அனுமதிக்குமாறும், தனது குடும்ப சூழல் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உதவுமாறும் போக்குவரத்துக்கழக நிர்வாகத்திற்கு பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கை மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்த வேல்முருகன், தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

இதைக் கண்ட அங்கிருந்த பணிமனை காவலர்கள் மற்றும் போலீசார் அவரிடம் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி காப்பாற்றியதுடன், அதிகாரிகளிடம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...