கோத்தகிரி அருகே அரசு பேருந்து-மினி லாரி மோதி விபத்து: 25 பேர் காயம்

நீலகிரி: கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் அரசு பேருந்தின் பின் பகுதியில் மினி லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பயணிகள் காயமடைந்தனர்.


நீலகிரி:  கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் அரசு பேருந்தின் பின் பகுதியில் மினி லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பயணிகள் காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் கடசோலையிலிருந்து கோத்தகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தின் பின்னால் மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வார்விக் என்னும் இடத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி, அரசு பேருந்தின் பின்னால் மோதி விபத்திற்குள்ளானது.



இதில், பேருந்தில் பயணம் செய்த 25 கூலித்தொழிலாளிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...