மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது போடப்படும் வழக்குகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது போடப்படும் வழக்குகளைக் கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது போடப்படும் வழக்குகளைக் கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றை ஆட்சி, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை கல்வி என ஒற்றை தன்மையை மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதாகவும், தற்போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த செயற்பாட்டாளர்கள் மாவேஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், சமூக சிந்தனையாளர் கவுதம், மனித உரிமை ஆர்வலர் ஆகியோரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...