வால்பாறையில் கடைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை: வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் தொல்லைகள் குறைந்திருந்தது. சூழலில், நேற்றிரவு காட்டு யானைகள் கடைகள் மற்றும் தேவாலயத்தை இடித்து சேதப்படுத்திய சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கோவை: வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் தொல்லைகள் குறைந்திருந்தது. சூழலில், நேற்றிரவு காட்டு யானைகள் கடைகள் மற்றும் தேவாலயத்தை இடித்து சேதப்படுத்திய சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.



நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து 26 காட்டு யானைகள் நல்லமுடி பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள ரேசன் கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதில் கடை முற்றிலும் சேதமடைந்தது.



பின்னர், அங்கிருந்த பிரிந்த 13 காட்டு யானைகள் முடீஸ் பகுதியில் உள்ள கதிரேசன் என்பவரின் கடையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. மற்ற 7 காட்டு யானைகள் கூட்டம் முடீஸ் பகுதியிலுள்ள தேவாலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை தூக்கி வெளியே எறிந்து சேதப்படுத்தின.



தகவலறிந்து வந்த வனத்துறையினர், போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டிருப்பதால் இன்று இரவு குடியிருப்புக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...