நல்லாசிரியர் விருதுக்கு தகுதியற்ற ஆசியர் தேர்வு - கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் குற்றச்சாட்டு

கோவை: கோவையில் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை: கோவையில் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் புகார் மனு அளித்துள்ளார்.

இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு எஸ்.சி.எம். அரசு உதவி பெரும் பள்ளியின் ஆசிரியர் தேர்வு ஈஷ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவருக்கு எதிராக கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், " ஈஷ்வரன், 'தூரிகை' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின் படி (8(4) (a)) , அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர் ஒருவர் இது போன்ற புத்தகங்களை எழுதும் போது, மாவட்ட தொடர்க்க கல்வி அலுவலரின் அனுமதியைப் பெற வேண்டும், ஆனால், ஈஷ்வரன் யாரிடமும் அனுமதி பெறவில்லை.

இது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தோம். இந்த சூழலில், அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விதிமுறைகளை மீறும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால், தற்போது அவருக்கு விருது வழங்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. 

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 



இது குறித்து ராஜ்குமார் கூறுகையில், "ஈஷ்வரன் இந்த விருதுக்கு தகுதியானவர் இல்லை. அவரது பெயரை பரிந்துரைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...