மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் நா.கார்த்திக் எம்.எல்.ஏ மனு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க.,வின் கோவை மாவட்ட கழக பொறுப்பாளருமான நா.கார்த்திக், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆணையாளரை சந்தித்து இன்று மனு அளித்தார்.

கோவை:  கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க.,வின் கோவை மாவட்ட கழக பொறுப்பாளருமான நா.கார்த்திக், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆணையாளரை சந்தித்து இன்று மனு அளித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தி.மு.க., சார்பில் நிறுவப்பட்ட அண்ணா சிலையை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள தரை மட்ட சுற்றுச்சுவர் இடிந்து, புதர் மண்டிக்கிடக்கிறது. அதனை உடனடியாக பராமரித்து சீரமைக்க வேண்டும்.

வெள்ளலூர் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சேதமடைந்துள்ள என்.ஜி.ஆர் பாலத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். அணைகள் நிரம்பியுள்ள போதும் பெரும்பாலான பகுதிகளுக்கு 20 அல்லது 10 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும்.



பராமரிப்பில்லாமல் பழுதாகியுள்ள சோலார் தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும். பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளுக்காக தோண்டியதால் பழுதடைந்துள்ள சாலைகளில், பேட்ச் வொர்க் செய்து சீரமைக்க வேண்டும். கழிவுநீர் தேங்கி நிற்கும் பழுதடைந்த மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்து, புதிய வடிகால் அமைக்க வேண்டும். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணையாளர் உறுதியளித்துள்ளார்." என்றார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...