கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க.,வின் கோவை மாவட்ட கழக பொறுப்பாளருமான நா.கார்த்திக், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆணையாளரை சந்தித்து இன்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தி.மு.க., சார்பில் நிறுவப்பட்ட அண்ணா சிலையை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள தரை மட்ட சுற்றுச்சுவர் இடிந்து, புதர் மண்டிக்கிடக்கிறது. அதனை உடனடியாக பராமரித்து சீரமைக்க வேண்டும்.
வெள்ளலூர் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சேதமடைந்துள்ள என்.ஜி.ஆர் பாலத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். அணைகள் நிரம்பியுள்ள போதும் பெரும்பாலான பகுதிகளுக்கு 20 அல்லது 10 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

பராமரிப்பில்லாமல் பழுதாகியுள்ள சோலார் தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும். பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளுக்காக தோண்டியதால் பழுதடைந்துள்ள சாலைகளில், பேட்ச் வொர்க் செய்து சீரமைக்க வேண்டும். கழிவுநீர் தேங்கி நிற்கும் பழுதடைந்த மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்து, புதிய வடிகால் அமைக்க வேண்டும். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணையாளர் உறுதியளித்துள்ளார்." என்றார்.