கூடலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் கைது : கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

நீலகிரி : கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை கூடலூர் அருகே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நீலகிரி : கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை கூடலூர் அருகே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

வெளி மாநிலங்களில் இருந்து உதகை மாவட்டத்திற்கு போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுக்க நீலகிரி மாவட்ட எஸ்.பி., சண்முகபிரியாவின் உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் கடும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள காக்கநல்லா சோதனை சாவடியில் எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். அதில், கஞ்சா பொட்டலங்களைக் கடத்தி வந்த ஓ.வேலியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி குணசேகர் (21) மற்றும் சையபுதீன் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். 

ஏற்கனவே, கஞ்சா வியாபாரி குணசேகர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, கஞ்சா போதையில் பெற்ற தாய் மற்றும் சகோதரியை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, குணசேகரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தெப்பக்காடு பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், விஜயன், மில்கி, மகேஷ் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...