திருப்பூர் : பொறியாளரை விசாரணைக்கு அழைத்து அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆய்வாளருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் : பொறியாளரை விசாரணைக்கு அழைத்து அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில், காவல் ஆய்வாளருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் வலையபாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் எனும் பொறியாளரை வழக்கு விசாரணைக்காக அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அருண் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், அப்போதைய அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் தன்னாசிபாண்டியன் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல் ஆய்வாளர் தன்னாசிபாண்டியனுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்தத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் அவர் கெடு விதித்தார். தற்போது, ஆய்வாளர் தன்னாசிபாண்டியன் பணி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.