நீலகிரி: கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெடுகுளா, கன்னேரி மற்றும் கொணவக்கரை ஊராட்சிகள் ஆனந்தகிரி, அண்ணாகாலனி, கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கன்னிகாதேவி காலனி பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர்வசதிகள் போன்றவை உள்ளனவா என பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், காக்கா சோலை, கன்னேரி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 4.12 லட்சம் மதிப்பில் நிலமேம்பாட்டு பணியின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்த நிலமேம்பாட்டு பணியின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களைப் பராமரிக்க வசதியின்றி விவசாயம் செய்யாமல் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை மேம்படுத்தி விவசாயம் செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதி, கோல்டி சாராள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.