பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் : ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 



பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விலை நிர்ணயத்தை மத்திய அரசே செய்ய வலியுறுத்தியும், கோவையில் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர், ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்டோவை இழுத்து வந்த அக்கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் ரூ. 50-க்கு பெட்ரோல் விலை கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளிக்குமாறு அறிவுறுத்திய போலீசார், ஆட்டோவை இழுத்து செல்ல அனுமதி மறுத்தனர். இதனையடுத்து, வெல்பேர் பார்ட்டி அமைப்பினர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...