கோவை: குனியமுத்தூர் பிள்ளையார்புரம் அருகில் பன்னாரி அம்மன் நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் வீட்டிற்குச் செல்லும் மின் இணைப்பு வழிப்பாதையை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகக் கடந்த 2010-ல் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாகவும் தற்போது மீண்டும் அந்த இடத்தில் அதிகாரிகளின் உத்தரவு பெற்று ஒப்புதலோடு வீடு கட்டி வருவதாகவும் கூறி, தங்களுக்கு இடையூறு செய்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.
மேலும், கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியரிடம் இது குறித்த மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, மைல்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் நாகேந்திரனின் மகன் நவநீதகிருஷ்ணன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்தார்.
பள்ளிக்குச் செல்லாமல் இங்கு வந்துள்ளாயே? என்று அங்கிருந்த போலீசார் கேட்டதற்கு, "எனது பெற்றோர் இருவருக்கும் விடுமுறை கிடைக்க பெற முடியாத காரணத்தால், கடந்த மூன்று வாரங்களாக மனு அளிக்க வந்த செல்கிறேன்." என்றார்.
தொடர்ந்து அந்த மாணவன் ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றார்.