அறப்போர் இயக்கம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மக்கள் கூட்டம்

கோவை: அறப்போர் இயக்கம் சார்பாக ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மக்கள் கூட்டம் இன்று கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.


கோவை: அறப்போர் இயக்கம் சார்பாக ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மக்கள் கூட்டம் இன்று கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மக்களுக்கு அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, ஊழல் தடுப்பு, ஒழிப்பு துறைகளுக்கு சுதந்திரம், அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளின் பொறுப்புடைமை உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் பல சமூக ஆர்வலர்களும், மக்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அறப்போர் மாநில உறுப்பினர் அத்தர் அகமது பேசுகையில், "நாம் சிறுவயதில் ஊழல் என்ற வார்த்தை கேள்விப்படும் போது ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் என கேள்வி பட்டோம். அதன்பின் தற்போது, 30 சதவீதம், 40 சதவீதம் என கேள்விப்படுகிறோம். சமீபத்தில், மின்சார துறையில் நிலக்கரி வாங்கியதில் ரூ. 6 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதுபோன்ற பல ஊழல் விஷயங்களை கொண்டு வந்துள்ளோம். மக்களும் ஊழலை ஒழிக்கப் போராட வேண்டும்," என்றார்.

அறப்போர் இயக்கம் சார்பாக வரும் 23-ம் தேதி 'என்னங்க சார் உங்க சட்டம்' தலைப்பில் சென்னையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், ஊழல் எதிர்ப்பு அறிக்கை உருவாக்கவுள்ளனர்.



இது தொடர்பாக பேசிய அறப்போர் இயக்க மாநில உறுப்பினர் ஜெயராமன் பேசுகையில், "23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஊழல் எந்த மட்டம் முதல் எந்த மட்டம் வரை, எந்த வகையில் ஊழல் நடைபெறுகிறது, அது எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது குறித்து விவாதிக்கவுள்ளோம். அதனை வைத்து ஊழல் எதிர்ப்பு அறிக்கை உருவாக்கப்படும்," என்றார்.

அதன்பின் அவர் ஊழல் குறித்து மக்களிடம் பேசியதாவது :- 1955-ம் ஆண்டு நம் நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் (GDP)-யில் 5 சதவீதம், 1970-ம் ஆண்டில் 7 சதவீதமும், 2015-ம் ஆண்டில் 62 சதவீதமும் கறுப்பு பணத்தின் தாக்கம் இருந்ததால், தற்போது சமுதாயத்தில் மக்களின் வாழ்வில் ஏற்ற தாழ்வு உருவாகியுள்ளதாகப் பேராசிரியர் அருண்குமார் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

இந்த ஊழலைக் கட்டுப்படுத்தி இருந்தால் தனிநபர் வருமானம் முதல் கொண்டு சமூக கட்டமைப்பு வரை அனைத்தும் மாறியிருக்கும். நாட்டின் வளர்ச்சி உயர்ந்திருக்கும். பணவீக்கம் பல மடங்கு உயர்ந்திருக்கும். இதனால், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு பட்ஜெட்டில் பொதுமான அளவு நிதி ஒதுக்கப்படும். மக்கள் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு வரப்பிரசாதமாக ஆர்.டி.ஐ., உள்ளது. அதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா, பீகார் போன்ற மற்ற மாநிலங்களில் உள்ளது போல, மிகவும் சரியானதாக அமைக்க வேண்டும். தற்போது, அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா என்பது வெறும் கண்துடைப்பானதே. மக்கள் நேரிடையாக ஜனநாயகத்தில் பங்கேற்க வேண்டும். அதற்கு வழிவகைகள் வேண்டும். அதற்கான வழிவகை தான் கிராமசபை கூட்டம். அதனை மக்கள் பயன்படுத்த வேண்டும்," என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...