திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டார்.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளை திருப்பூர் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்த 8 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி இன்று வெளியிட்டார். இதில், மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும், 10,82,855 ஆண்களும், 10,88,377 பெண்களும், 245 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,71,477 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்த நிகழ்வில் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.