மூன்றாம் நபர் இன்சூரன்சில் நீண்ட கால அடிப்படையிலான விதிமுறை நாளை முதல் அமல் : வாகனங்களின் விலை உயர வாய்ப்பு

கோவை : உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்சில் நீண்ட கால அடிப்படையிலான புதிய இன்சூரன்ஸ் விதிமுறை நாளை முதல் அமலாக உள்ளது.

கோவை : உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்சில் நீண்ட கால அடிப்படையிலான புதிய இன்சூரன்ஸ் விதிமுறை நாளை முதல் அமலாக உள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம். இந்த இன்சூரன்ஸ் கட்டாவிட்டால் விபத்து ஏற்படும் போது பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து, இந்த தொகையை வாகனங்கள் விற்பனை செய்யும்போதே மொத்தமாக வசூலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் நபர் இன்சூரன்சில் நீண்ட கால அடிப்படையிலான புதிய இன்சூரன்ஸ் விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடைமுறையால், வாகனங்களின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் முகவர் கோபால் கூறுகையில், "இந்த திட்டம் நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளாகவும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளாகவும் இருக்கும். 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் ஆகும். 1,000 முதல் 1,500 சிசி வரையிலான என்ஜின் திறன் கொண்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ. 9 ஆயிரத்திற்கும் மேலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.24 ஆயிரத்திற்கும் மேல் ஆகும். அதேபோல, இருசக்கர வாகனங்களுக்கு, 75 சிசி இன்ஜின் திறனுக்கு குறைவான வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ. 1,000-க்கு மேலாகவும், 75 முதல் 150 சிசி இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ. 3,000-க்கு மேலாகவும், 150 முதல் 350 சிசி கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5,000-க்கு மேலாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 350 சிசிக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் விலை உயரவில்லை மாறாக 3 ஆண்டுகள் கட்டணத்தை ஒரே தவணையாக கட்டவுள்ளோம். இதனால், நன்மையே. ஆண்டுக்கு ஒருமுறை இன்சூரன்ஸ் கட்டுவது மறந்துவிடும் இந்த சூழ்நிலையில் இந்த திட்டம் கைகொடுக்கும்" என்றார்.

மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் வணிக ரீதியாக செயல்படும் வாகனங்களுக்கு கிடையாது என்பதால் லாரி, ஆட்டோ, டெம்போ போன்ற வாகனங்களின் இன்சூரன்ஸ் விலையில் மாற்றம் இல்லை. அதேசமயம், புதிதாக இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் நபர்களை இது பாதிக்கும். 

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வாகன ஓட்டி நியூட்டன் என்பவர் கூறுகையில், "இன்சூரன்ஸ் என்பது அரசாங்கம் கையில் மட்டுமே இருக்க வேண்டும். அது தனியார் கையில் இருந்தால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. புதிதாக வாகனம் எடுக்கும் போது வாகனங்களின் விலையும் உயரும். வாகனம் வாங்குவோர் ஏற்கனவே பெரும்பாலும் கடனாக தான் வாங்குகிறார்கள். இதில், இது வேறு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் போய்விடும்," என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில் "வாகன ஒட்டிகள் இன்சூரன்ஸ் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதற்காக மட்டும் தான் இன்சூரன்ஸ் கட்டுகிறார்கள். விலை உயர்வு இப்படி கூடிக்கொண்டே போனால் இன்சூரன்ஸ் கட்டாமல் அபராதமே கட்டிவிடலாம் என்ற மனநிலைக்கு வாகன ஒட்டிகள் வந்து விடுவார்கள். இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படப்போவது மக்களே," என்றார்.

"மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒர் ஆண்டு கட்ட வேண்டியதை முன்கூட்டியே மூன்று ஆண்டுகளுக்கு கட்டுவதால் நன்மை தான்" என தனியார் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் நிறுவன ஊழியர் ஒருவர் கூறினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...