கோவை குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் தொண்டு நிறுவனங்கள் மனு

கோவை: கோவையில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மனு கொடுத்துள்ளன.

கோவை: கோவையில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மனு கொடுத்துள்ளன. 



கோவையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுதுளி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சி.யூ.பி.இ., இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு குழு, சிறுவாணி விழுதுகள் மற்றும் குறிச்சிகுளம் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜுன் மேவால் பங்கேற்று கோவையில் உள்ள குளங்கள் குறித்து கலந்துரையாடினார். 

அப்போது, கடந்த சில நாட்களாக கழிவுநீரால் கோவையில் உள்ள குளங்கள் அடையும் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனு ஒன்றை கொடுத்தனர். மேலும், ஆரம்பத்தில் கோவை மாநகருக்குட்பட்ட குளங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்ததாகவும், ஆனால், தற்போது புறநகர் பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளும் கழிவுநீரால் மாசடைந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, நிதி ஒதுக்கீடு செய்து, குளங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.



மேலும், மோசமான நிலையில் உள்ள மதகுகள் மற்றும் தடுப்புகளினால், மழை காலங்களில் சேமிக்க வேண்டிய தண்ணீரில் கழிவுகள் லந்து செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதோடு, நீர்நிலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேவாலிடம் தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. 

இதைத் தொடர்ந்து, அமைச்சர் அர்ஜுன் மேவால், நீலாம்பூர் அருகே உள்ள அச்சன்குளத்தை பார்வையிட்டார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...