விநாயகர் சதுர்த்தி: திருப்பூரில் தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகள்

திருப்பூர்: வரும் செப்டம்பர் மாதம், 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: வரும் செப்டம்பர் மாதம், 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும், திருப்பூர் வஞ்சிபாளையம் பிரிவு மற்றும் அலகுமலையில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு, சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது முடிவடைந்து சிலைகள், பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப தயாராக இருக்கிறது. 

வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் தூக்கி செல்வது போல், ஜல்லிக்கட்டு விநாயகர், ரத விநாயகர், சிம்ம வாகனம் விநாயகர் என, 3, 5.5, 7, 9 மற்றும் 11 அடிகள் என, 5,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு திருப்பூரில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...