திருப்பூர்: அருந்ததியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாயில் கருப்பு பட்டயம் அணிந்து பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள குளத்துப்பாளையம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அருந்ததியின மக்கள் கடந்த 15 வருடத்திற்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அரசு அதிகாரிகளிடம் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் இதுவரையில் பட்டா வழங்குவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, இன்று அப்பகுதியில் வசிக்கும் அருந்ததியின மக்கள் வாயில் கருப்பு பட்டயம் அணிந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு கொடுத்தனர். மனு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.