கோவை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் வெள்ளலூர் குளத்தில் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் வெள்ளலூர் குளம் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சமஸ்கார அகாடமியும் இணைந்து இயற்கையைப் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில், 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் ஆறுகளின் முக்கியத்துவம் மற்றும் அதனைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார்.

அப்போது, பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் அடையும் மாசுபாடு குறித்து மணிகண்டன் பேசியதாவது :- பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய்களில் நீர் சாதாரணமாக பாய்ந்து ஓட முடியாதவாறு அடைப்பை ஏற்படுத்துகின்றன. இது குளங்களை வறட்சியடையச் செய்ய முக்கிய காரணியாக இருக்கிறது. வெள்ளலூர் குளம் கடந்த 12 ஆண்டுகளாக நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்தான், என்றார்.

மேலும், இந்த குளத்தினால் பறவைகள், மீன்கள் போன்ற உயிரினங்களும் பயனடைவதை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.