சேலத்தில் பல பகுதிகளில் நில அதிர்வு: மக்கள் பீதி

சேலம்: சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் மாநகரப் பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


சேலம்: சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் மாநகரப் பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

சேலம் மாநகராட்சியின், கொண்டலாம்பட்டி, காமலாபுரம், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, பண்ணப்பட்டி, மேச்சேரி, ஏற்காடு போன்ற பல பகுதிகளில் இன்று காலை 7:47 மணி அளவில் சில விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு சேலம் அம்மாப்பேட்டையில் தொடங்கி பென்னாகரம் வரை உள்ள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேட்டூர் அணையில் தற்போது 116.98 அடிக்கு மேல் நீர் இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் நில அதிர்வை கணக்கீடு செய்யும் சிஸ்மோமீட்டர் பழுதடைந்து விட்டதால் நில அதிர்வு அளவு இன்னும் கணக்கிடும் பணியில் தாமதம் ஏற்பட்டது. 

எனினும் சிறிது நேரத்தில் ரிக்டர் அளவில் 3.3 ஆக நில அதிர்வு பதிவாகியிருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...