“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.


கோவை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவை மாநகருக்குள் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ கஞ்சா போதைப்பொருளை Coimbatore City Prohibition Enforcement Wing போலீசார் நள்ளிரவு வாகன சோதனையில் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.



போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுங்கம் – ராமநாதபுரம் ரவுண்டானா பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது TN 34 AF 8910 என்ற பதிவு எண் கொண்ட ஐஷர் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், பொருட்கள் ஏற்றுமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, லாரியில் இருந்த கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (29) மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் அருண்குமார் (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மணிகண்டன் ஏற்கனவே E3 சரவணம்பட்டி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி (HS 01/2021) என்பது தெரியவந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து போலீசார் குற்ற எண் 106/2026-ன் கீழ் NDPS சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...