கோவை: கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பந்தய சாலை பகுதியில் திறந்தவெளி திரையரங்கம், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகள் விளையாட்டு திடல்கள், கழிவறைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும்.

தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை முழுமையாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனைகள் வழக்கமான ஒன்று. இதனால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவிற்கு சாதகமான நிலையை எடுத்தது. ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி உரிமையை அ.தி.மு.க., மீட்டுள்ளது. மக்களவையில் எம்.பி.,க்கள் இல்லாத தி.மு.க.,வின் செயல் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கருத்து பேசுவதற்கான அவசியம் புரியவில்லை.
மத்திய அரசுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க., தமிழர்களின் நலனுக்காகவோ, ஈழத்தமிழர் நலன்களுக்காகவோ என்ன நடவடிக்கை எடுத்தது?" எனவும் கேள்வி எழுப்பினார்.