பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு, சானிட்டரி நாப்கின்னுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த நிலையில், ஒரு வருடத்தில் 328 பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சானிட்டரி நாப்கின்னுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்து. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மத்திய அரசுக்கு நாப்கின்களை பார்சல் அனுப்புவது போன்று பல்வேறு விதமாக தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 28-வது கூட்டம் நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சானிட்டரி நாப்கின், கைத்தறி பொருட்கள் உட்பட 40 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி நிதியமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.