கோவை: இந்திய பருத்தி உலகத் தரம் வாய்ந்தது என்றும், அதனை பஞ்சாக மாற்றும் போதசு அதன் தரம் குறைக்கப்படுகிறது என்றும் இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது அதன் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மில்களுக்கு தேவையான பஞ்சு தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள ஜின்னிங் மில்களில் இருந்து பெறப்படுகிறது.
இந்தியாவில் விளையும் பருத்தி உலகில் தரம் வாய்ந்த பருத்திகளில் ஒன்று. ஆனால் பஞ்சாக்கும் செயல்முறையில் வேற்றுப் பொருட்கள் சேர்வதால் தரம் குறைவாக மதிப்பிடப்படுகிறது.
இதனை களைய ஜின்னிங் மில்களில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முயற்சிகள் வெற்றி அடையும் போது சர்வதேச சந்தையில் பருத்தி மற்றும் ஜவுளி பொருட்களின் தரம் உயர்ந்து தொழில் மேம்படும். முன்னதாக நேற்று 64 ஜின்னிங் மில்கள் மற்றும் ஸ்பின்னிங் மில்களுக்கு சென்று அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிந்தேன். இன்று மாலை நூற்பாலை-ஜின்னிங் மில் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 15 ஜின்னிங் மில்களுக்கு 'சிறந்த ஜின்னர் விருது (2017-18) வழங்கப்பட உள்ளது." என்றார்.