இந்திய பருத்தி உலகத் தரம் வாய்ந்தது; பஞ்சாக மாற்றுவதில் தரம் குறைக்கப்படுகிறது - இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பு

கோவை: இந்திய பருத்தி உலகத் தரம் வாய்ந்தது என்றும், அதனை பஞ்சாக மாற்றும் போதசு அதன் தரம் குறைக்கப்படுகிறது என்றும் இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

கோவை: இந்திய பருத்தி உலகத் தரம் வாய்ந்தது என்றும், அதனை பஞ்சாக மாற்றும் போதசு அதன் தரம் குறைக்கப்படுகிறது என்றும் இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார். 

​இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது அதன் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மில்களுக்கு தேவையான பஞ்சு தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள ஜின்னிங் மில்களில் இருந்து பெறப்படுகிறது.

இந்தியாவில் விளையும் பருத்தி உலகில் தரம் வாய்ந்த பருத்திகளில் ஒன்று. ஆனால் பஞ்சாக்கும் செயல்முறையில் வேற்றுப் பொருட்கள் சேர்வதால் தரம் குறைவாக மதிப்பிடப்படுகிறது.

இதனை களைய ஜின்னிங்​ ​மில்களில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முயற்சிகள் வெற்றி அடையும் போது சர்வதேச சந்தையில் பருத்தி மற்றும் ஜவுளி பொருட்களின் தரம் உயர்ந்து தொழில் மேம்படும். முன்னதாக நேற்று 64 ஜின்னிங் மில்கள் மற்றும் ஸ்பின்னிங் மில்களுக்கு சென்று அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிந்தேன். இன்று மாலை நூற்பாலை-ஜின்னிங் மில் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 15 ஜின்னிங் மில்களுக்கு 'சிறந்த ஜின்னர் விருது (2017-18) வழங்கப்பட உள்ளது." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...