திருப்பூர்: பல்லடம் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல்லடம் நகராட்சி பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் ராஜாராமின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை ஆய்வாளர் சங்கர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்லடத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.