திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருக்கும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் திருப்பூரில் நாள் ஒன்றுக்கு 100 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு, நாள்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு முழுவதும் லாரி மற்றும் வேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் சாய ஆலை நிறுவனங்களுக்கும், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், கோழிப்பண்ணை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அதேபோல் சிறு மற்றும் குறு பின்னலாடை நிறுவனங்களுக்கு லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளை கொண்டு செல்லப் போவதில்லை என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 100 கோடி வரையிலான வர்த்தகம் பாதிப்பு ஏற்படுவதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியுள்ளார்.