டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கு: அறிக்கையை தந்தையிடம் ஒப்படைக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவு

கோவை: டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தையிடம் ஒப்படைக்க சி.பி.ஐ.,க்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தையிடம் ஒப்படைக்க சி.பி.ஐ.,க்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., "குற்றவாளிகள் யாரும் இல்லை. இவ்வழக்கை கை விடுகிறோம்." என்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதன் மீதான விசாரணைக்காக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள், அறிக்கை உள்ளிட்ட விவரங்களை ரவி கோரிய நிலையில், அவற்றை தருமாறு சி.பி.ஐ.,க்கு நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...