வால்பாறையில் கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்கள் கொட்டி தீர்த்த மழை மறுபடியும் பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால், சாலையோரங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.


வால்பாறை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்கள் கொட்டி தீர்த்த மழை மறுபடியும் பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால், சாலையோரங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. 

வால்பாறை-பொள்ளாச்சி செல்லும் 36-வது கொண்டை ஊசி வளைவு அருகில் இன்று காலை ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனால், அவ்வழியாகச் சென்ற 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்ற அந்த மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து சீர் செய்யப்பட்ட பின்னர் வாகனங்கள் சென்றன.



தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வால்பாறை அருகே உள்ள கூலங்கள் ஆறு, சோலையாறு, பிர்லா பால்ஸ், நடுமலை, வாழைத்தோட்டம் போன்ற ஆறுகளில் சுற்றலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெல்லப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றோரங்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...