50 டன் தேங்காய் தொட்டிகளை இறுதிச் சடங்குக்காக காசிக்கு அனுப்புகிறது 'ப்ரீத் பவுண்டேசன்'

கோவை: கோவையில் உள்ள உணவகங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 50 டன் தேங்காய் தொட்டிகளை இறுதிச் சடங்குக்காக காசிக்கு அனுப்புகிறது 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பு.

கோவை: கோவையில் உள்ள உணவகங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 50 டன் தேங்காய் தொட்டிகளை இறுதிச் சடங்குக்காக காசிக்கு அனுப்புகிறது 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பு.

கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக இந்த சேவையை செய்வதாக கூறுகிறார், 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பின் நிறுவனர் டாக்டர்.அஷ்வின் நித்திஷ். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த திட்டத்திற்கு 'பசுமை காசி' என்று பெயர் சூட்டியுள்ளோம். மரங்கள் கார்பன் டை ஆக்சைடின் வங்கிகள் ஆகும்.

மரங்களை எரிக்கும் போது கார்பன் உமிழ்வுகள் அதிகமாகும். எனவே, மரங்களுக்கு பதிலாக தேங்காய் தொட்டிகளை நாங்கள் அனுப்புகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தேங்காய் தொட்டிகள், காசியில் உள்ள மணிகர்ணிகை காடுகளில், சடலங்களை எரிக்க பயன்படுகிறது. 

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2000 டன் தேங்காய் தொட்டிகளை அனுப்ப நாங்கள் முயற்சி செய்கிறோம். இளைஞர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். அடுத்த கட்டமாக, அரசுப் பள்ளி குழந்தைகள் மூலம் தேங்காய் தொட்டிகளை சேகரிக்க முயற்சிப்போம்." என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...