கோவையில் கடல் உணவுத் திருவிழா : கடல் போல திரண்ட உணவு பிரியர்கள்

கோவை: கோவையில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலவகை மீன்களால் தயாரிக்கப்பட்ட கடல் உணவுத் திருவிழாவில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலவகை மீன்களால் தயாரிக்கப்பட்ட கடல் உணவுத் திருவிழாவில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் (le- meridian) இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஜுலை 13-ம் தேதி தொடங்கிய இத்திருவிழா வருகிற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. கடம்பா (Squits), டைகர் பிராண்ஸ் (Tiger prawns ), லாப்டர் (laughter), கால்ம்ஸ் (calms), அக்டோபஸ் (octobus), சுறா புட்டு உள்ளிட்ட 60 வகையான மீன்களில் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பொதுமக்களின் பார்வைக்காகவும், ருசித்து மகிழவும் வைக்கப்பட்டு உள்ளது. 



மேலும், காண்டினெண்டல், ஒரினெண்டல், தென்னிந்திய கடல் உணவுகள், சைனீஸ், ரசியன் போன்ற நாடுகளின் உணவுகள் இங்கு இடம் பெற்று உள்ளது. 



இது குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளரும், லீ மெரிடியன் ஹோட்டலின் உதவி தலைமை சமையலருமான கே. சக்திவேல் கூறுகையில், "வாழை இலையில் மடித்துத் தரப்படும் கறிமீன் பொரித்தது உள்ளிட்ட நெத்திலி, மீன்வறுவல், இறால் வறுவல், மத்தி மீன் உள்ளிட்ட பல உணவுகள் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சமைக்கப்பட உள்ளது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறும். பெரியவர்களுக்கு வரியுடன் சேர்த்து ரூ. 1,200, சிறியவர்களுக்கு அதில் 50 சதவீதம் தள்ளுபடி தரப்படும்," என்றார்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...