கோவை: மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையின் ஒரு பகுதி குண்டும் குழியுமாக இருப்பதால், அங்கு பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது.

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் கே.பி.எஸ்., மருத்துவமனை அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த சாலை பல மாதங்களாக இப்படி தொண்டப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்த சாலையில் அதிகளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அங்கு பதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய் சேதமடைந்து, தண்ணீர் வீணாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதனால், ஒருபுறம் மட்டும் ஒரு வழி சாலையாக ஒரு ஓரமாக வாகனங்கள் சென்று வரும் சிரமமான நிலை உள்ளது. இருப்பினும், இந்த சாலை அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாமலே இருந்து வருகிறது. எனவே, இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி உரிய நடவடிக்கைகள் எடுத்து, பொது மக்களுக்கு பயனுள்ள சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.