கோவை: கோவை நரசிபுரம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்யின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி பயிற்சியாளர் ஆறுமுகசாமிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை நரசிபுரம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்யின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி பயிற்சியாளர் ஆறுமுகசாமிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை நரசிபுரத்தில் செயல்பட்டு வரும் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, பேரிடர் காலங்களில் 2-வது மாடியில் இருந்து குதிக்கும் பயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியின் போது, லோகேஸ்வரி என்ற மாணவியை இரண்டாவது மாடியில் இருந்து குதிக்குமாறு கூறிய போலி பயிற்சியாளர் ஆறுமுகம், அவரை கீழே தள்ளியுள்ளார். அப்போது, நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த மழைத் தடுப்பு அமைப்பு மீது மோதி விழுந்த லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆறுமுகத்தின் சான்றிதழ்கள் போலி என்பதைக் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கண்ணன், 20-ம் தேதி வரை 4 நாட்கள் ஆறுமுகத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.