திருப்பூரில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் : 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 



அரண்மனை புதூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாநகராட்சியில் பிற பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருப்பூர் தெற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மொத்த விலை கடையில் (அஞ்சனா ஸ்டோர்ஸ்) பெட்டிகளைக் கொண்டு செல்லப்படுவது குறித்து சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பொருட்களை போலிசார் கண்டுபிடித்தனர். 



இதனையடுத்து, அந்தக் கடையை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராமன் (27) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், டெல்லியில் இருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வரவழைத்து திருப்பூர் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த முருகேசன் என்பவரையும் கைது செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக லட்சுமணன், பாபு ஆகிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...