ரயில் பயணி தவறவிட்ட உடைமைகளை மீட்டுக் கொடுத்த டிக்கெட் பரிசோதகர்

கோவை: ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மீட்டு அவரிடம் கொடுத்த கொடுத்த டிக்கெட் பரிசோதகரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

கோவை: ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மீட்டு அவரிடம் கொடுத்த கொடுத்த டிக்கெட் பரிசோதகரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சேலம் கோட்டத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் ரயில் எண். 12690 நாகர்கோவில்- சென்னை வழித்தடத்தினை ரயில் சேலம் வந்த போது அதில் சோதனை செய்தார்.

அப்போது, அந்த ரயிலில் பான்கார்டு மற்றும் ரூ.4442 பணத்துடன் ஒரு கைப்பை இருப்பது தெரியவந்தது. அந்த பையை நாகேஷ்வரி என்ற பயணி தவறவிட்டுச் சென்றதும், அவர் திருச்சியில் இறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கைப்பையை மீட்ட டிக்கெட் பரிசோதகர் மணிகண்டன் அதனை உரியவரிடம் ஒப்படைக்க கூறி, ரயில்வே நிர்வாகத்திடம் (GRP) கொடுத்தார். அவரது இந்த பணியினை சேலம் கோட்ட ரயில்வே பாராட்டுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...