திருப்பூர்: அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி காளிபாளையம் பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் அருகில் உள்ள காளிபாளையம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அருந்ததியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், தார் சாலை வசதிகள் இல்லை என்றும், பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகளுக்கு பேருந்து வசதிகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, அரசு அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை மனு கொடுத்ததும் பயனில்லை என்றும், வாக்கு கேட்டு மட்டும் வரக்கூடியவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தங்களது பகுதிகளைக் கண்டு கொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட எங்களது கிராமத்தில் சுமார் ஐந்து வருடமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லை. தற்போது தான் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிரச்சனை குறித்து நல்லூர் நகராட்சியில் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தமுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்." என்றனர்.