கோவை: கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.
கோவை: கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.
அதன் விவரம் பின்வருமாறு:-
மழை அளவு
பொள்ளாச்சி 17 மி.மீட்டர், வால்பாறை 112 மி.மீட்டர், சின்னகல்லார் 188 மி.மீட்டர், சின்கோனா 130 மி.மீட்டர், நீராரர் அணை 104 மி.மீட்டர், சோலையார் அணை 104 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நீராரர் அணை அணையின் நீர் வரத்து 1471.99 கன அடியாக உள்ள நிலையில், 1053.59 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 8689.70 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று வாரங்களாக அதன் முழு கொள்ளளவான 160 அடியில் இருந்தது. தற்போது அங்கு 164 அடி வரை நீர் இருப்பு உள்ளது.

அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சேடல் வழியாக 5793.17 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 602.08 கன அடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் வழியாக மின் உற்பத்திக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளா செல்கிறது.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று சராசரி அளவாக 30.12 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, அம்மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:-
ஊட்டி 34 மி.மீ, நடுவட்டம் 46 மி.மீ, கல்லட்டி 33 மி.மீ, கிளன்மார்கன் 34 மி.மீ, அவலாஞ்சி 97 மி.மீ, எமரால்டு 29 மி.மீ, அப்பர் பவானி 100 மி.மீ, கேத்தி 7 மி.மீ, தேவாலா 54 மி.மீ, கொடநாடு 16, கொன்னக்கொரை 2 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.