கோவையின் பல்வேறு இடங்களில் கனமழை: பொருட்படுத்தாது பள்ளி செல்லும் குழந்தைகள்

கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.



கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்கள், மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் தற்போது இரண்டாம் கட்ட தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.



காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையிலும், கோவை வாசிகள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.



வால்பாறையில் கடந்த சில நாட்களாகவே இந்த மழை தொடர்கிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின் விநியோகம் தடைபட்டுள்ளது.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...