நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

காங்கேயத்தில் இருந்து நீலகிரியில் சுற்றுலாவை நிறைவு செய்து விட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் டெம்போ டிராவலரில் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே வந்த இந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 21 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெலிங்டன் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மலைப் பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது கவனத்துடன், பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.