கோவையில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பலி: நேருக்கு நேர் மோதிய காட்சிகள் வெளியீடு

கோவை: கோவையில் கடந்த 12-ம் தேதி காவல்துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 12-ம் தேதி காவல்துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவையை அடுத்துள்ள கணியூர் சுங்கச்சாவடியில் கடந்த 12-ம் தேதி இருசக்கர வாகனமும், காவல்துறை வேன் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (64) என்பவர் பலியானார். உடன் வந்த இவரது மனைவி தேவி (55) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த சூழலில், விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கணியூர் சுங்கச்சாவடியின் அருகே கணவன்-மனைவி இருவரும், இரு சக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதையில் செல்ல முயற்சித்ததும், அதனால், விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார், காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த கருப்புசாமி என்ற காவலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...