தூய்மை பாரதம் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை: கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் 'தூய்மை பாரதம் பசுமை பாரதம்' என்ற நிகழ்ச்சி, அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் 'தூய்மை பாரதம் பசுமை பாரதம்' என்ற நிகழ்ச்சி, அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலைத் தூய்மையாக பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களிடம் விளக்கப்பட்டது. தொடர்ந்து, தூய்மை பாரதம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சியில் பணிபுரிந்துவரும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபரணங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, தூய்மை பாரதம் பசுமை பாரதம் உறுதிமொழி மாணவர்களால் ஏற்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் பேசுகையில், “தேசிய அளவில் நடத்தப்பட்ட தூய்மை நகரங்களுக்கான பட்டியலில் கோவை 16-வது இடத்தில் உள்ளது. அடுத்த வருடம் நடத்தப்படும் ஆய்வில் முன்னிலை பெற பொதுமக்களின் ஒத்துழைப்பும், மாணவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். எனவே, பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளி வளாகம், வீடு ஆகியவற்றைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும். தூய்மையின் முக்கியத்துவம் குறித்து உங்களின் நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்,” என்றார்.



தொடர்ந்து, அவர் பேசுகையில், “துப்பரவு எனும் மகத்தான பணி செய்து வரும் தூய்மை பணியாளர்கள், அரசால் தடைசெய்யப்பட்டுள்ள உயிருக்கு ஆபத்தான பாதாள சாக்கடையில் இறங்குதல், உபகரணங்கள் இல்லாமல் துப்பரவு பணிகளை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதுகுறித்த புகார்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற தூய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும்,,” என்றார். 



பின்னர், பள்ளி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று தூய்மை பாரதம் மற்றும் தடை செய்யப்பட்ட துப்புரவு பணிகள் குறித்த நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கினர்.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...