கோவை - பொள்ளாச்சி இடையிலான அரசு பேருந்துகளில் கட்டணம் அதிகரித்து வசூலிப்பதாகப் புகார்

கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 3 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 3 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

உக்கடம் - ஆத்துபாலம் இடையே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகிறது. ஆத்துபாலத்திலிருந்து புட்டு விக்கி லேக், செல்வபுரம், மீன்மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல வழக்கம் போல் கரும்புக்கடை வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சுமார் 5 கி.மீ., தூரம் வரை சுற்றி வர வேண்டிய சூழ்நிலையுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயணிகளிடம் அரசுப் பேருந்து நிர்வாகம் ரூ. 3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை - பொள்ளாச்சி இடையே சாதாரண கட்டணமாக ரூ. 25-ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ. 33-ம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாதாரண பேருந்துகளில் ரூ. 28 வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டண உயர்வு குறித்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் நம்மிடம் கூறுகையில், "வியாழக்கிழமை கட்டண உயர்வு இருந்தது. இன்று அது இல்லை. அதேசமயம், சில பேருந்துகளில் மட்டும் இந்தக் கட்டண உயர்வு உள்ளது. தனியார் பேருந்துகளில் இது இல்லை," எனக் கூறினர். 

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் கேட்ட போது, பேருந்துகளில் கட்டண உயர்வு ஏற்றப்படவில்லை, என்றார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...