பில்லூர் அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட காட்டு யானை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட காட்டு யானையை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட காட்டு யானையை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகிளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த பத்தாம் தேதி அதன் முழு கொள்ளளவான நூறு அடியை எட்டி நிரம்பியது. இதன் பிறகும் மழை தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து அதிகரித்தபடி இருந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் பவானியாற்றில்  வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சமயபுரம் நீர்மின் நிலையம் அருகே இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று ஆற்றைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்ல முற்பட்டது. அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை சிக்கிக்கொண்டது. ஆற்றினுள் சிறிது தூரம் சென்ற யானை தண்ணீரின் வேகத்திற்குப் பயந்து நீரில் தத்தளித்தபடியே மீண்டும் ஊர்பகுதியில் உள்ள கரைக்கே திரும்பியது.



இது குறித்து தகவல் கிடைத்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கரையோரத்தில் நின்று கொண்டிருந்த யானையை, மீண்டும் ஆற்றுக்குள் சென்று சிக்கி விடாமலும், ஊருக்குள் நுழைந்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், அதனை அருகில் இருந்த மற்றொரு வனப்பகுதியை நோக்கி விரட்டினர்.

இதனிடையே, யானையின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :- ஆற்று நீரில் சிக்கி தவித்த இந்த ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக சமயபுரம் மற்றும் அருகில் உள்ள ஊர் பகுதிகளில் சுற்றித் திரிகிறது. இதனை நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். இந்த யானை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...