கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறு தானிய உற்பத்தி என்பது குறைந்துள்ளது. மேலும், மானாவாரி பயிராகவும், ஊடு பயிராகவும் விவசாயிகள் தானிய உற்பத்தி செய்து வந்தனர். இவ்வாறு விளைவிக்கும் சிறு தானியங்களான ராகி, சோளம், கம்பு, மக்காச்சோளம், அவரை, துவரை ஆகியவற்றிற்கு தற்போது உரிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள், வேதனையடைந்துள்ளனர்.

இதனால், சிறுதானியங்கள் உற்பத்தியை விவசாயிகள் கைவிடும் சூழல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மக்காச்சோளம், கம்பு, சோளம் ஆகிய செடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அதில் சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் 50 ஆயிரம் வழங்க வேண்டும், விளைவிக்கும் சிறுதானிய பயிர்களை அரசே கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.